பாடல் 980 - திருப்புத்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தாத்த தனத்தத் தானன தான தாத்த தனத்தத் தானன தான தாத்த தனத்தத் தானன ...... தனதான |
வேலை தோற்க விழித்துக் காதினில் ஓலை காட்டி நகைத்துப் போதொரு வீடு காட்டி யுடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி மேனி காட்டி வளைத்துப் போர்முலை யானை காட்டி மறைத்தத் தோதக வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல் கால மேற்க வுழப்பிக் கூறிய காசு கேட்ட துகைப்பற் றாஇடை காதி யோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல் காதல் போற்று மலர்ப்பொற் பாயலின் மீத ணாப்பு மசட்டுச் சூளைகள் காம நோய்ப்ப டுசித்தத் தீவினை ...... யொழியேனோ ஆல கோட்டு மிடற்றுச் சோதிக பாலி பார்ப்ப திபக்ஷத் தால்நட மாடி தாத்தி ரிபட்சித் தாவென ...... வுமிழ்வாளி ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக னோடை பூத்த தளக்கட் சானவி யாறு தேக்கி ய கற்றைச் சேகர ...... சடதாரி சீல மாப்ப திமத்தப் பாரிட சேனை போற்றி டுமப்பர்க் கோதிய சேத னார்த்த ப்ரசித்திக் கேவரு ...... முருகோனே சேல றாக்க யல்தத்தச் சூழ்வய லூர வேற்க ரவிப்ரர்க் காதர தீர தீர்த்த திருப்புத் தூருறை ...... பெருமாளே. |
* திருப்புத்தூர் காரைக்குடிக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 980 - திருப்புத்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தாத்த, தனத்தத், கையில், தானன, கொண்ட, மீன்களும், பெருமாளே, பூத்த, காட்டும், என்னும்