பாடல் 971 - இலஞ்சி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனந்த தனதன தனந்த தனதன தனந்த தனதன ...... தனதான |
கரங்க மலமின தரம்ப வளம்வளை களம்ப கழிவிழி ...... மொழிபாகு கரும்ப முதுமலை குரும்பை குருகுப கரும்பி டியினடை ...... யெயின்மாதோ டரங்க நககன தனங்கு தலையிசை யலங்க நியமுற ...... மயில்மீதே அமர்ந்து பவவினை களைந்து வருகொடி யவந்த கனகல ...... வருவாயே தரங்க முதியம கரம்பொ ருததிரை சலந்தி நதிகும ...... ரெனவான தலம்ப ரவமறை புலம்ப வருசிறு சதங்கை யடிதொழு ...... பவராழி இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப னிரண்டு புயமலை ...... கிழவோனே இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு இலஞ்சி மருவிய ...... பெருமாளே. |
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 971 - இலஞ்சி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஒப்பாகும், தனதன, தனந்த, தமிழ், பெற்ற, ஆகிய, பெருமாளே, விளங்க, இலஞ்சி