பாடல் 970 - . புரு.மங்கை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான |
வேனின்மத னைந்து பாணம்விட நொந்து வீதிதொறு நின்ற ...... மடவார்பால் வேளையென வந்து தாளினில்வி ழுந்து வேடைகெட நண்பு ...... பலபேசித் தேனினும ணந்த வாயமுத முண்டு சீதளத னங்க ...... ளினின்மூழ்கித் தேடியத னங்கள் பாழ்படமு யன்று சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ ராலிலையி லன்று ...... துயில்மாயன் ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த ஆரணமு குந்தன் ...... மருகோனே வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த மானொடுவி ளங்கு ...... மணிமார்பா மாமறைமு ழங்கு ஸ்ரீபுருட மங்கை மாநகர மர்ந்த ...... பெருமாளே. |
* நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 970 - . புரு.மங்கை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தந்த, பெரிய, நாங்குநேரி, கொண்ட, மங்கை, வந்து, ஸ்ரீபுருட, பெருமாளே