பாடல் 968 - . புரு.மங்கை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தந்தன தானதன தந்த தந்தன தானதன தந்த தந்தன ...... தனதான |
ஆடல்மத னம்பின் மங்கைய ராலவிழி யின்பி றங்கொளி யாரமத லமப் கொங்கையின் ...... மயலாகி ஆதிகுரு வின்ப தங்களை நீதியுட னன்பு டன்பணி யாமல்மன நைந்து நொந்துட ...... லழியாதே வேடரென நின்ற ஐம்புல னாலுகர ணங்க ளின்தொழில் வேறுபட நின்று ணர்ந்தருள் ...... பெறுமாறென் வேடைகெட வந்து சிந்தனை மாயையற வென்று துன்றிய வேதமுடி வின்ப ரம்பொரு ...... ளருள்வாயே தாடகையு ரங்க டிந்தொளிர் மாமுனிம கஞ்சி றந்தொரு தாழ்வறந டந்து திண்சிலை ...... முறியாவொண் ஜாநகித னங்க லந்தபின் ஊரில்மகு டங்க டந்தொரு தாயர்வ சனஞ்சி றந்தவன் ...... மருகோனே சேடன்முடி யுங்க லங்கிட வாடைமுழு தும்ப ரந்தெழ தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட ...... நடமாடுஞ் சீர்மயில மஞ்சு துஞ்சிய சோலைவளர் செம்பொ னுந்திய ஸ்ரீபுருட மங்கை தங்கிய ...... பெருமாளே. |
* நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 968 - . புரு.மங்கை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தந்தன, கொண்டு, தந்த, பெருமை, என்னும், வாய்ந்த, நாங்குநேரி, ஒப்பற்ற, செயல்களும், மனம், நின்று, வந்து, பெருமாளே, விளங்குவதும், வின்ப