பாடல் 964 - மதுரை - திருப்புகழ்

ராகம் - மோ.னம்
தாளம் - சது.ர .ம்பை - 7 /4 யு 0
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதான தானத் தனதான தனதான தானத் ...... தனதான |
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப் பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் ...... குமரேசா சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே. |
சகல கலைகளையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள ஞான ஒளியாகிய கடலிலே திளைத்துக் குளித்து, மண், பெண், பொன் என்ற மூவாசைகளாம் கடல்களை நீந்திக் கடந்து, பலத்ததான, உரத்த சப்தத்துடன் கூடிய சமய வாதங்களில் நான் மாறுபட்டுக் கிடக்காமல், இறைவனைப் பற்றிய சிவ ஞான வாழ்வைத் தந்தருள்வாயாக. வள்ளிமலையிலே வாழ்ந்த, ஆச்சரியத் தோற்றம் கொண்ட, குறப்பெண்ணாம் வள்ளியின் மனத்திலே வீற்றிருக்கும் இளைஞனாம் குமரேசனே, வள்ளிக்காக வில்லைக் கையில் ஏந்திய வேடன் உருவில் வந்தவனே, சேவற் கொடியை கரத்தில் கொண்டவனே, லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் (செல்வமும், கல்வியும்) ஒருங்கே கூடும் கூடற்பதியாகிய பவானியில் வாழும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 964 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, பெருமாளே, சேவற், வாழ்வைத், தானத்