பாடல் 965 - மதுரை - திருப்புகழ்

ராகம் - .ண்முகப்ரியா
தாளம் - .ங்கீர்ணசாபு - 4 1/2
தகதிமி-2, தகதகிட-2 1/2
தானத் தனதான தானத் ...... தனதான |
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப் பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே. |
நீதித்தன்மை கொண்டதாய், சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய், உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய் விளங்கும் நல்லறிவைத் தந்தருள்வாயாக. ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே, ஞான சமுத்திரமே, குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே, நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில் உள்ள பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 965 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, தனதான, தானத்