பாடல் 956 - மதுரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான |
அலகில வுணரைக் கொன்ற தோளென மலைதொளை யுருவச் சென்ற வேலென அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டா£க அடியென முடியிற் கொண்ட கூதள மெனவன சரியைக் கொண்ட மார்பென அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ கலகல கலெனக் கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க வாதிகள் கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங் கலைகளு மொழியப் பஞ்ச பூதமு மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென் இலகுக டலைகற் கண்டு தேனொடு மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன் இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே எழுதென மொழியப் பண்டு பாரதம் வடகன சிகரச் செம்பொன் மேருவில் எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ வலம்வரு மளவிற் சண்ட மாருத விசையினும் விசையுற் றெண்டி சாமுக மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு மரகத கலபச் செம்புள் வாகன மிசைவரு முருகச் சிம்பு ளேயென மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே. |
* நரசிம்மராக வந்த விஷ்ணு ஹிரண்யனின் வதைக்குப் பின் வெறி அடங்காமல் திரிந்தார். சிவபிரான் தமது இன்னொரு அம்சமாகிய சரபப்பக்ஷியாக வந்து நரசிம்மரின் ஆணவ ஆட்டத்தை அடக்கினார். முருகனும் அதுபோன்றே ஒரு சிவ அம்சம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 956 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - புகழ்ந்தும், உனது, தந்த, கொண்ட, தனதன, தானன, தனனத், தம்பிரானே, வந்து, வந்த, எழுதிய, மீது, மொழியப், அழகிய, சென்ற, கண்ட, பங்க, கண்டு, செம்பொன்