பாடல் 957 - மதுரை - திருப்புகழ்

ராகம் - நீலாம்பரி தாளம் - ஆதி 2 களை
- எடுப்பு - 3/4 இடம்
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த ஆறுமுக வித்த ...... கமரேசா ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும் ஆரணமு ரைத்த ...... குருநாதா தானவர் குலத்தை வாள்கொடு துணித்த சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா தாளிணைக ளுற்று மேவியப தத்தில் வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே வானெழு புவிக்கு மாலுமய னுக்கும் யாவரொரு வர்க்கு ...... மறியாத மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க மாமயில் நடத்து ...... முருகோனே தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி சேரமரு வுற்ற ...... திரள்தோளா தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல்கொடு தணித்த ...... பெருமாளே. |
* மேல் ஏழு உலகங்கள் - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹலோகம், தபலோகம், ஜனலோகம், சத்யலோகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 957 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தத்த, மிகுந்த, மேல், குறத்தி, னுக்கும், பெருமாளே