பாடல் 955 - தனிச்சயம் - திருப்புகழ்

ராகம் - சங்கரானந்தப்ரியா
தாளம் - ஆதி
தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான |
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக் கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத் தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகி உரத்த வெண்பலு நழுவிம தங்கெட் டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட் டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண் டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப் பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற் றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும் அசுத்த னென்றிட வுணர்வது குன்றித் துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக் கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயே திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட் டிடக்கை துந்துமி முரசு முழங்கச் செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள் தரித்து மண்டையி லுதிர மருந்தத் திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத் தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா தடச்சி கண்டியில் வயலியி லன்பைப் படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற் றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே. |
* தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது.பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால் தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 955 - தனிச்சயம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், டிகுட்டி, டுண்டுட், டுடுடுடு, குண்டிகு, தனத்த, டிகுதீதோ, டிண்டிட், டுண்டுடு, டிகுடிகு, தனதன, டுடுட்டு, தந்தன, திரித்தி, தந்தத், ரின்றிட், ரிரிரிரி, ரிந்திரி, நிலையை, கிண், அடைந்து, வெளுத்து, தலத்திலும், தனிச்சயம், திமிதிமி, திமித்தி, குருடாகி, மிந்திமி, துந்துமி, பெருமாளே, கந்தப், இருந்த