பாடல் 954 - தனிச்சயம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான |
இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட் கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம் எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத் தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத் தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான் அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட் டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக் கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங் குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக் குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத் தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ் சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத் தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே. |
* தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது. பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால் தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 954 - தனிச்சயம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தனத், என்னும், தனிச்சயம், கொண்ட, போகும், பெருமாளே, அடைந்து, பாடும்