பாடல் 927 - கருவூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன தத்தன தத்த தனதனத் ...... தனதான |
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர் முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம் கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங் கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ் வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே. |
* சித்தன் - இது முருகன் திருநாமங்களில் ஒன்று, சித்தத்தை நிறைப்பவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 927 - கருவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தத்தன, என்னும், தத்த, வீரனே, வீற்றிருக்கும், பெருமாளே, தனதன, மரகதம்