பாடல் 928 - கருவூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தன தனன தனதாத்தன தந்தன தனன தனதாத்தன தந்தன தனன தனதாத்தன ...... தனதான |
சஞ்சல சரித பரநாட்டர்கள் மந்திரி குமரர் படையாட்சிகள் சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித் தண்டிகை களிறு பரிமேற்றனி வெண்குடை நிழலி லுலவாக்கன சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க் குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையி லிசையாத்திரள் கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய ...... மியல்கீதங் கொங்கணி மகளிர் பெருநாட்டிய நன்றென மனது மகிழ்பார்த்திபர் கொண்டய னெழுதும் யமகோட்டியை ...... யுணராரே பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர் வென்றிட சகுனி கவறாற்பொருள் பங்குடை யவனி பதிதோற்றிட ...... அயலேபோய்ப் பண்டையில் விதியை நினையாப்பனி ரண்டுடை வருஷ முறையாப்பல பண்புடன் மறைவின் முறையாற்றிரு ...... வருளாலே வஞ்சனை நழுவி நிரைமீட்சியில் முந்துத முடைய மனைவாழ்க்கையின் வந்தபி னுரிமை யதுகேட்டிட ...... இசையாநாள் மண்கொள விசையன் விடுதேர்ப்பரி யுந்தினன் மருக வயலூர்க்குக வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே. |
இப்பாடலில் மகாபாரத கதைச் சுருக்கத்தைக் காணலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 928 - கருவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இருந்த, தந்தன, கொண்ட, தனதாத்தன, வீற்றிருந்து, துரியோதனன், தங்களுக்கு, ஆண்டுகள், நிலையில், பெருமாளே, பஞ்சணை, கொம்புகள், குழல்கள், சகுனி, விதியை