பாடல் 924 - கருவூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தனத்ததன தனனத் தனத்ததன தனனத் தனத்ததன ...... தனதான |
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி யிரதக் குடத்தையெணு ...... மரபோடே இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய இதழ்சர்க் கரைப்பழமொ ...... டுறழூறல் முளரிப் புவொத்தமுக முகம்வைத் தருத்திநல முதிரத் துவற்பஅல்குல் ...... மிசைமூழ்கி மொழிதத் தையொப்பகடை விழிகட் சிவப்பமளி முழுகிச் சுகிக்கும்வினை ...... யறஆளாய் நளினப் பதக்கழலு மொளிர்செச் சைபொற்புயமெ னயனத் திலுற்றுநட ...... மிடும்வேலா நரனுக் கமைத்தகொடி யிரதச் சுதக்களவ னறைபுட் பநற்றுளவன் ...... மருகோனே களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக கமலப் புயத்துவளி ...... மணவாளா கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர் கருவைப் பதிக்குளுறை ...... பெருமாளே. |
இளநீர் போன்றதும் மலை போன்றதும் ஆகிய மார்பகமாகிய அமுதம் பெருகும் இடத்தை, கனி ரசம் அடங்கியுள்ள குடத்தை கருத்துடன் வழக்கமான முறையில் இரண்டு கைகளாலும் அடைத்து, இடை நெகிழவும், கூந்தல் கலையவும், வாயிதழினின்றும் சர்க்கரை போலவும் பழம் போலவும் ஊறும் (எச்சில்) தேனை தாமரை மலர் போன்ற முகத்தோடு முகம் வைத்து பருகி உண்டு, இன்பம் முற்றுவதாகிய அனுபவத்துடன், இழிந்த பெண்குறியிடத்தே முழுகி, பேச்சு கிளியின் பேச்சுக்கு ஒப்பாக, கடைக் கண்கள் செந்நிறம் கொள்ள படுக்கையில் முழுகி இன்பம் அனுபவிக்கும் தொழில் தொலையும்படியாக, நீ என்னை ஆண்டருளுக. தாமரை போன்ற திருவடியில் உள்ள வீரக் கழலும், விளங்குகின்ற வெட்சி மாலை அணிந்த அழகிய திரு புயங்களும் என் கண்களில் இடம் பெற்று விளங்க நடனம் செய்கின்ற வேலனே, அருச்சுனனுக்கு ஏற்பட்டிருந்த அநுமக் கொடி பறக்கும் தேரை ஓட்டுபவன், (வெண்ணெய்) திருடன், தேன் கொண்ட மலர்களையும் நல்ல துளசி மாலையையும் அணிந்த திருமாலின் மருகனே, கலவைச் சாந்து அணிந்துள்ள மார்பினை உடையவள், இன்பகரமான காமலீலைகள் செய்யும் குறமகள், தாமரையன்ன முகத்தையும் திருக்கரங்களையும் உடைய வள்ளியின் கணவனே, சமுத்திரத்தையும், கிரெளஞ்ச மலையையும் சூரனையும் புண்படுத்தி அழித்து, பேர்பெற்ற மேலான கருவூர்ப் பதிக்குள் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 924 - கருவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், தனத்ததன, முழுகி, அணிந்த, இன்பம், போலவும், பெருமாளே, போன்றதும், தாமரை