பாடல் 923 - கருவூர் - திருப்புகழ்

ராகம் - பூர்விகல்யாணி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதானத் தனதான தனதானத் ...... தனதான |
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப் பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய் கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே. |
என் புத்தியைக் கொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி, என் மனம் நன்னெறியின் செல்ல அதனால் நான் ஒரு உத்தம மனிதனாகி, சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி, மேலான யோக வழியை நான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. என் செல்வமே, அழிவில்லாப் பொருளே, எனது தியானப் பொருளே, சிறந்த பேரின்பப் பொருளானவனே, எனக்குப் புகலிடமே, எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே, கருவூர்த்* தலத்தில் எழுந்தருளிய பெருமாளே.
* கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும். சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 923 - கருவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நான், மேலான, பொருளே, பெருமாளே, தனதான, தனதானத்