பாடல் 919 - திருத்தவத்துறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்த தத்தன தானன தானன தனத்த தத்தன தானன தானன தனத்த தத்தன தானன தானன ...... தனதான |
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள் பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார் நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல் நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள் வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக் கதித்த பத்தமை சாலடி யார்சபை மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர் கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ வரைத்த நுக்கரர் மாதவ மேவின ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய ...... வடிவேலா மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ ருரைத்து ளத்திரு வாசக மானது மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத் திரைக்க டற்பொரு காவிரி மாநதி பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ...... குவையாகச் செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம் வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே. |
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** திருத்தவத்துறையின் இன்றைய பெயர் 'லால்குடி'. திருச்சிக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 919 - திருத்தவத்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, ஆகிய, உணவு, தனத்த, தத்தன, அமைத்தல், நல்கல், வளர்த்தல், காத்தல், தொழில், மருந்து, முப்பத்திரண்டு, அநாதைகளுக்கு, உனது, பெருமாளே, வளர்த்த, மாதர்கள், மாலைகளையும், விளங்கும், நான், கொண்ட, பெரிய