பாடல் 918 - திருத்தவத்துறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானன தந்தன தத்த தத்தன தானன தந்தன தத்த தத்தன தானன தந்தன தத்த தத்தன ...... தனதான |
காரணி யுங்குழ லைக்கு வித்திடு கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர் காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே காதள வுங்கய லைப்பு ரட்டிம னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப் பூரண கும்பமெ னப்பு டைத்தெழு சீதள குங்கும மொத்த சித்திர பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய் யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே வீரபு யங்கிரி யுக்ர விக்ரம பூதக ணம்பல நிர்த்த மிட்டிட வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட வீசிய பம்பர மொப்பெ னக்களி வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர் வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா சீரணி யுந்திரை தத்து முத்தெறி காவிரி யின்கரை மொத்து மெத்திய சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே. |
* திருத்தவத்துறையின் இன்றைய பெயர் 'லால்குடி'. திருச்சிக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 918 - திருத்தவத்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தத்த, தத்தன, தந்தன, நடனம், வீசி, மோதி, உடைய, பெருமாளே, பூரண, வெட்டி, வந்து, செய்கின்ற