பாடல் 908 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - கேதாரம்
தாளம் - அங்கதாளம்
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை மருவு முருவமு மலமல மழகொடு குலவு பலபணி பரிமள மறசுவை ...... மடைபாயல் குளிரி லறையக மிவைகளு மலமல மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல ...... மொருநாலு சுருதி வழிமொழி சிவகலை யலதினி யுலக கலைகளு மலமல மிலகிய தொலைவி லுனைநினை பவருற வலதினி ...... யயலார்பால் சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு முறவு மலமல மருளலை கடல்கழி துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற ...... அருள்வாயே விருது முரசுகள் மொகுமொகு மொகுவென முகுற ககபதி முகில்திகழ் முகடதில் விகட இறகுகள் பறையிட அலகைகள் ...... நடமாட விபுத ரரகர சிவசிவ சரணென விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் ...... வடிவேலா மருது நெறுநெறு நெறுவென முறிபட வுருளு முரலொடு தவழரி மருகசெ வனச மலர்சுனை புலிநுழை முழையுடை ...... யவிராலி மலையி லுறைகிற அறுமுக குருபர கயலு மயிலையு மகரமு முகள்செநெல் வயலி நகரியி லிறையவ அருள்தரு ...... பெருமாளே. |
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 908 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போதும், தனதன, மலமல, கொண்ட, தகதிமி, மொகு, நெறு, மீன்களும், செய்ய, வயலூர், திருவருள், விளங்கும், சிவசிவ, மனைவி, பெருமாளே, பொருந்திய, உடைய, தவிர