பாடல் 906 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தான தான தனதன தனனத் தான தான தனதன தனனத் தான தான தனதன ...... தனதான |
கமலத் தேகு லாவு மரிவையை நிகர்பொற் கோல மாதர் மருள்தரு கலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள் கலவிக் காசை கூர வளர்பரி மளகற் பூர தூம கனதன கலகத் தாலும் வானி னசையுமி ...... னிடையாலும் விமலச் சோதி ரூப இமகர வதனத் தாலு நாத முதலிய விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும் வெயிலெப் போதும் வீசு மணிவளை அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர் விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ சமரிற் பூதம் யாளி பரிபிணி கனகத் தேர்கள் யானை யவுணர்கள் தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லுருவோனே சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர் புகழக் கானி லாடு பரிபுர சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா அமரர்க் கீச னான சசிபதி மகள்மெய்த் தோயு நாத குறமகள் அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலா அருளிற் சீர்பொ யாத கணபதி திருவக் கீசன் வாழும் வயலியின் அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே. |
* இவரே "செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு" என்று அருணகிரிநாதருக்கு அருளினார். அந்தப் பாடல்தான் 'பக்கரை விசித்ரமணி' ஆகும்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 906 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, கொண்ட, தனதன, தனனத், உள்ள, திருப்புகழ், வயலூர், செய்யும், வாழி, பூதம், யாளி, தேர்கள், பேய்கள், பெருமாளே