பாடல் 897 - கந்தனூர் - திருப்புகழ்

ராகம் - பூர்விகல்யாணி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தகிட-1 1/2, தக-1
தந்தனா தத்தனா தந்தனா தத்தனா தந்தனா தத்தனா ...... தந்ததான |
விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு மிஞ்சநீ விட்டவடி ...... வங்களாலே வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி வந்துதா இக்கணமெ ...... யென்றுகூற மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி வந்துசே யைத்தழுவல் ...... சிந்தியாதோ அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு மங்கிபார் வைப்பறையர் ...... மங்கிமாள அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ் அண்டரே றக்கிருபை ...... கொண்டபாலா எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர் எந்தைபா கத்துறையு ...... மந்தமாது எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ் எந்தைபூ சித்துமகிழ் ...... தம்பிரானே. |
* அருணகிரியாரின் வாழ்வில் அருணாசலேஸ்வரரே அவர் முன்பு தரிசனம் தந்து திருநீறு அளித்து ஆட்கொண்ட நிகழ்ச்சியைக் குறிப்பது.
** கந்தனூர் புதுக்கோட்டைக்குத் தெற்கே 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 897 - கந்தனூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மனம், தத்தனா, தந்தனா, அழகிய, ஆகிய, தந்தையும், வந்து, கந்தனூர், தம்பிரானே