பாடல் 892 - நெடுங்களம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான |
பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள் பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப் பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி பஞ்சவர்வி யன்பதியு ...... டன்குலாவக் குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ கொஞ்சியசி லம்புகழல் ...... விந்துநாதங் கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை கொன்றருள்நி றைந்தகழ ...... லின்றுதாராய் எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல இன்பரச கொங்கைகர ...... முங்கொளாமல் எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள இந்துநுத லும்புரள ...... கங்குல்மேகம் அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள அம்பொனுரு மங்கைமண ...... முண்டபாலா அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில் அண்டரய னும்பரவு ...... தம்பிரானே. |
(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஐம்புலன்களும், பழைமையாக வரும் நல் வினை, தீ வினைகளும், நோய்களும் பஞ்சு எரிவது போல எரிந்து, பொடி வடிவம் ஆகி முதலிலேயே அற்றுப் போக, தாமதம் இன்றி பழைய அடியார்களுடன் பழகி, சுவாதிஷ்டானத்தில் பிரமனும், மணி பூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் ருத்திரரும், விசுத்தியில் மகேசுரரும், ஆக்ஞையில் சதாசிவமும்* விளங்க, (ஆறாவது ஆதாரமாகிய மூலாதாரத்தில்) யானை முக விநாயகரும் சீருடன் அமர்ந்திட, (ஆக, ஆறு ஆதாரங்களிலும்) அவரவர்க்கு உரிய உறைவிடங்களில் வந்து விளங்க, (அப்போது) கொஞ்சுவது போன்ற இனிய சிலம்பின் ஓசை, கழலின் ஓசை, விந்து சம்பந்தமான நாத ஒலி இவை எல்லாம் இனிமையாக ஒலிக்க, மயிலின் முதுகின் மேல் நீ வந்து காட்சி கொடுத்து, என் மனக் கவலையை ஒழித்து, உனது திருவடியை இன்று தருவாயாக. இடையும் மெலிவுற்றுச் சுழல, அம்பு போன்ற கண்களும் சுழல, இன்பச் சுவை நிறைந்த மார்பகங்களைக் கரத்தில் கொள்ள முடியாத வகையில் விம்மி நிற்க, ஆடை குலைய, அதிவேகத்துடன் அமுத ரசம் பெருக, பிறை போன்ற நெற்றியும் சுருங்க, இருளும் மேகமும் பயப்படும்படி அவ்வளவு கறுத்த கூந்தல் புரண்டு அலைய, பொற் குண்டலங்களும் ஊசலாட, அழகிய பொன் உருவம் விளங்கும் மங்கை தேவயானையை திருமணம் செய்து கொண்ட குமரனே, அன்பர்கள் விளங்கும் திருநெடுங்களம்** என்னும் வளப்பம் பொருந்திய தலத்தில், தேவர்களும், பிரமனும் போற்றும் தம்பிரானே.
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
** நெடுங்களம் திருச்சிக்கு அடுத்த திருவெறும்பியூர் ரயில் நிலையத்துக்கு கிழக்கே 7 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 892 - நெடுங்களம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்ததன, இதழ், கரம், உரிய, சுழல, பெயர்களும், வந்து, விளங்கும், விளங்க, யுஞ்சுழல, தம்பிரானே, சுவை, என்னும், பிரமனும்