பாடல் 883 - தஞ்சை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தன தானன ...... தனதான |
அஞ்சன வேல்விழி ...... மடமாதர் அங்கவர் மாயையி ...... லலைவேனோ விஞ்சுறு மாவுன ...... தடிசேர விம்பம தாயரு ...... ளருளாதோ நஞ்சமு தாவுணு ...... மரனார்தம் நல்கும ராவுமை ...... யருள்பாலா தஞ்சென வாமடி ...... யவர்வாழத் தஞ்சையில் மேவிய ...... பெருமாளே. |
மை பூசிய வேல் போன்ற கண்கள் உள்ள அழகிய விலைமாதர்களிடத்தில் மாயை மயக்கத்தில் அலைச்சல் உறுவேனோ? நான் மேம்பட்டு விளங்குமாறு உனது திருவடியில் சேர்வதற்கு ஒளி உருவமாக உனது திருவருள் எனக்கு அருளக் கூடாதோ? விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய நல்ல மகனே, உமாதேவி பெற்றருளிய பாலனே, சரணம் நீயே எனக் கொண்டுள்ள அடியார்கள் வாழ தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 883 - தஞ்சை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உனது, பெருமாளே, தஞ்சையில்