பாடல் 884 - தஞ்சை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தந்த தானனத் தந்த தானனத் தந்த தானனத் ...... தனதான |
அம்பு ராசியிற் கெண்டை சேலொளித் தஞ்ச வேமணிக் ...... குழைவீசும் அங்க ணாரிடத் தின்ப சாகரத் தங்கி மூழ்குமிச் ...... சையினாலே எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித் திந்த்ர சாலஇப் ...... ப்ரமைதீர இங்கு வாவெனப் பண்பி னாலழைத் தெங்கு மானமெய்ப் ...... பொருள்தாராய் கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க் கொண்டல் போல்குழற் ...... கனமேருக் குன்று போல்முலைப் பைங்கி ராதியைக் கொண்ட கோலசற் ...... குணவேலா சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் ...... குருநாதா சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே. |
* 'சம்பரன்' என்ற அசுரனை மன்மதன் தனது மறு பிறப்பில் கொன்றதால், 'சம்பராரி' என்று மன்மதனுக்குப் பெயர் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 884 - தஞ்சை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, அழகிய, உடைய, தானனத், மீன், உள்ள, தஞ்சை, கெண்டை, கொண்ட, பெருமாளே