பாடல் 879 - திருக்குரங்காடுதுறை - திருப்புகழ்

ராகம் - பாகே.
தாளம் - தி.ரஏகம் - 3
தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத் ...... தனதான |
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற் கசைந்தாடு குழைக்கவசத் ...... திரடோளும் அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத் தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலுஞ் சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச் சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதந் திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத் தினந்தோறு நடிப்பதுமற் ...... புகல்வேனோ இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட் டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும் இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத் திருங்கான நடக்குமவற் ...... கினியோனே குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக் கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக் குரங்காடு துறைக்குமரப் ...... பெருமாளே. |
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 879 - திருக்குரங்காடுதுறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தான, தனத்தனனத், குரங்காடுதுறை, கொடிய, மைலில், உள்ளது, செய்யும், மீது, திமிந்தோதி, திமித்திமிதித், பெருமாளே, புனைந்துள்ள