பாடல் 878 - திருச்சக்கிரப்பள்ளி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன ...... தனதான |
திட்டெ னப்பல செப்பைய டிப்பன பொற்கு டத்தையு டைப்பன வுத்தர திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன ...... வதின்மேலே செப்ப வத்திம ருப்பையொ டிப்பன புற்பு தத்தையி மைப்பில ழிப்பன செய்த்த லைக்கம லத்தைய லைப்பன ...... திறமேய புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன சித்த முற்பொர விட்டுமு றிப்பன புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன ...... இளநீரைப் புக்கு டைப்பன முத்திரை யிட்டத னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல் புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு ...... தருள்வாயே துட்ட நிக்ரக சத்தித ரப்ரப லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய துட்க ரக்கவி தைப்புக லிக்கர ...... செனுநாமச் சொற்க நிற்கசொ லட்சண தட்சண குத்த ரத்தில கத்திய னுக்கருள் சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் ...... முகநாத தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி ...... மயிலேறி சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில் மிக்க ரத்நம திற்புடை சுற்றிய சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே. |
இப்பாடலின் முதல் 10 வரிகள் பெண்களின் மார்பகங்களை உவமைகளைக் கூறி இன்ன காரணத்தால் அவை இணையாக மாட்டா என்று விளக்குகின்றன. இதே முறையைப் பின் வரும் திருப்புகழ்ப் பாடல்களிலும் காணலாம்.408 - கமலமொட்டை - (திருவருணை),563 - குடத்தைத்தகர் - (திருக்கற்குடி).
* திருச்சக்கிரப்பள்ளி தஞ்சாவூருக்கு வடகிழக்கே 11 மைலில் ஐயம்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 878 - திருச்சக்கிரப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றால், தத்தன, உவமை, கூறலாம், செய்வன, கொண்ட, தத்த, குடத்தை, சிவபெருமான், வல்லமை, மொட்டை, தாமரை, வகையில், உடைய, உள்ள, மார்பகங்களை, என்னும், சொன்ன, உவமிக்கலாம், மேரு, முத்திரை, டுப்பன, டைப்பன, டிப்பன, புத்தி, பெருமாளே, யானையின், திசையில், திட், பெண்களின், தள்ளுவன