பாடல் 873 - திருநாகேச்சுரம் - திருப்புகழ்

ராகம் - ரேவதி
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி தகதிமி-4
தானான தானத் தனத்த தத்தன தானான தானத் தனத்த தத்தன தானான தானத் தனத்த தத்தன ...... தனதான |
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள் ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள் நானாவு பாயச் சரித்ர துட்டர்கள் ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொங் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள் கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை கூடாத பாவத் தவத்த துட்டர்கள் ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் கோமாள நாயிற் கடைப்பி றப்பினி ...... லுழல்வாரே வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி பேரார வாரச் சமுத்தி ரத்தினில் மீளாம லோடித் துரத்தி யுட்குறு ...... மொருமாவை வேரோடு வீழத் தறித்த டுக்கிய போராடு சாமர்த் தியத்தி ருக்கையில் வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு ...... வயலூரா நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர் மாயாவி காரத் தியக்க றுத்தருள் ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள் நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே. |
* கும்பகோணத்துக்குக் கிழக்கில் 3 மைலில் உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள சிவபெருமானின் பெயர் நாகேசர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 873 - திருநாகேச்சுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - துஷ்டர்கள், துட்டர்கள், கொண்ட, தானத், தகதிமி, செய்த, தானான, தனத்த, தத்தன, உடைய, தந்தை, உள்ள, கொண்டு, சற்குரு, ஆசார, குடித்த, துரத்தி, பெருமாளே, செய்யும்