பாடல் 872 - சிவபுரம் - திருப்புகழ்

ராகம் - நீலாம்பரி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1 தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன ...... தனதான |
மனமெ னும்பொருள் வானறை கால்கனல் புனலு டன்புவி கூடிய தோருடல் வடிவு கொண்டதி லேபதி மூணெழு ...... வகையாலே வருசு கந்துய ராசையி லேயுழல் மதியை வென்றுப ராபர ஞானநல் வழிபெ றும்படி நாயடி யேனைநி ...... னருள்சேராய் செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி யெண்குண பூரணி காரணி சிவைப ரம்பரை யாகிய பார்வதி ...... அருள்பாலா சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற அசுரர் தங்கிளை யானது வேரற சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே கனக னங்கையி னாலறை தூணிடை மனித சிங்கம தாய்வரை பார்திசை கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் ...... முனையாலே கதற வென்றுடல் கீணவ னாருயி ருதிர முஞ்சித றாதமு தாயுணு கமல வுந்திய னாகிய மால்திரு ...... மருகோனே தினக ரன்சிலை வேளருள் மாதவர் சுரர்க ளிந்திர னாருர காதிபர் திசைமு கன்செழு மாமறை யோர்புக ...... ழழகோனே திரும டந்தையர் நாலிரு வோர்நிறை அகமொ டம்பொனி னாலய நீடிய சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே. |
(*1) 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
(*2) எண் குணங்கள் பின்வருமாறு:தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவிலா ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை.
(*3) அஷ்டலட்சுமிகள் பின்வருமாறு:தன, தான்ய, ¨தரிய, வீர, வித்தியா, கீர்த்தி, விஜய, ராஜ்ய லட்சுமி.
(*4) சிவபுரம் கும்பகோணத்துக்கு தென்கிழக்கில் 3 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 872 - சிவபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தகதிமி, தத்துவம், பின்வருமாறு, தந்தன, உடைமை, அஷ்டலட்சுமிகள், முனிவர்கள், சிவபுரம், சிவதத்துவங்கள், தேவர்கள், தத்துவங்கள், புறநிலை, இன்பம், மாதவர், பார்வதி, சங்கரி, பெருமாளே, காற்று, ஆகிய, பூமி, நீர், ஒத்த