பாடல் 868 - கும்பகோணம் - திருப்புகழ்

ராகம் - அ.¡வேரி
தாளம் - ஆதி
- எடுப்பு - 3/4 இடம்
தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான |
கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத் துருத்த வெண்பலு மடைய விழுந்துட் கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் ...... சுருள்நோயாற் கலக்க முண்டல மலமுற வெண்டிப் பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக் கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் ...... கொழுமேனி அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப் பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித் தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப் பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட் டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் ...... றிடுவேனோ புறத்த லம்பொடி படமிக வுங்கட் டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப் புகட்ட ரங்கிய விரக துரங்கத் ...... திறல்வீரா பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட் டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப் புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச் சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத் தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் ...... கிரிமேவிச் செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப் பரிச்சு மந்திடு குமர கடம்பத் திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 868 - கும்பகோணம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அடைந்து, தனத்த, தந்தத், எல்லாம், தனதன, தந்தன, நிலை, மிகவும், வாய்ந்த, வலிமை, என்னும், போதும், பெருமாளே, விளங்கியிருந்த, கந்தப், போய்