பாடல் 869 - கும்பகோணம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன ...... தனதான |
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும் விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலூடே தெளித்தி டும்பல சாதியும் வாதியும் இரைத்தி டுங்குல மேசில கால்படர் சினத்தி டும்பவ நோயென வேயிதை ...... யனைவோருங் கனைத்தி டுங்கலி காலமி தோவென வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ...... முடல்பேணிக் கடுக்க னுஞ்சில பூடண மாடைகள் இருக்கி டுங்கலை யேபல வாசைகள் கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி சமர்த்த மொன்றிய தானவர் சேனையை வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே தினைப்பு னந்தனி லேமய லாலொரு மயிற்ப தந்தனி லேசர ணானென திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 869 - கும்பகோணம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்ன, தானன, தனத்த, தந்தன, பிறப்பு, நான், அணிவது, பெருமாளே, எழுவது, தோதக, னந்தன, திமித்தி, திந்திமி, தீதக, வளைத்து