பாடல் 867 - கும்பகோணம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான |
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாசமலர் சிந்து ...... குழல்கோதி வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க மால்பெருகி நின்ற ...... மடவாரைச் சாலைவழி வந்து போமவர்க ணின்று தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித் தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி சாலமிக நொந்து ...... தவியாமற் காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்தி காதலுமை மைந்த ...... எனவோதிக் காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள் காண அரு ளென்று ...... பெறுவேனோ கோலமுட னன்று சூர்படையின் முன்பு கோபமுட னின்ற ...... குமரேசா கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப கோணநகர் வந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 867 - கும்பகோணம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வந்து, நின்ற, தந்த, கொண்டு, தானதன, பெருமாளே, இரண்டு, முன்பு, கண்டு, நின்று, ழுந்தி, பெறுவேனோ