பாடல் 865 - கும்பகோணம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தனா தத்ததன தந்தனா தத்ததன தந்தனா தத்ததன ...... தனதான |
கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை கெந்தவா சப்புழுகு ...... மணநாறுங் கிம்பு¡£ சக்களப கொங்கையா னைச்சிறிது கிஞ்சுகா ணப்பெருகி ...... யடியேனும் மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி வண்டனா கப்புவியி ...... லுழலாமல் வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது மஞ்சுதா ளைத்தினமு ...... மருள்வாயே அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி ளைந்துவீ ழப்பொருத ...... கதிர்வேலா அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி னன்புளா ரைச்சிறையி ...... டசுரோரைக் கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு கொந்தியா டத்தலையை ...... யரிவோனே கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு கும்பகோ ணத்திலுறை ...... பெருமாளே. |
கெண்டை மீனுக்கு ஒப்பான கண்களை உடைய (விலை)மாதர்கள் மீதுள்ள ஆசைக் கலப்பு மிக்க நறுமணம் உள்ள புனுகின் நறுமணம் வீசும் (மார்பகம்), தந்தத்தில் பூண் அணிந்தது போல விளங்குவதும், பச்சைக் கற்பூரக் கலவை அணிந்ததுமான மார்பாகிய யானையை சிறிதளவு கண்டதும் ஆசை பெரியதாகி, அதனால் அடியேனும் விரைந்து சென்று வஞ்சகத்துக்கு இடமான புணர்ச்சி இன்பம் கொண்டு காம உணர்ச்சியில் மனம் உருகி, தீயோனாக பூமியில் நான் அலைச்சல் அடையாமல், (நீ) வந்து ஞானப் பொருளில் ஒன்றை உபதேசித்து, உனது அழகிய திருவடியை நாள் தோறும் எனக்குத் தந்தருளுக. தேவர்கள் வாழும்படி ஒளி வீசும் வலியதான மேரு மலை கலக்குண்டு விழும்படிப் போர் செய்த ஒளி வேலனே, ஐந்து பொறிகளாலும் சிவபெருமானை மனதில் ஊற வைத்து தவ நெறியில் அன்புள்ள தேவர்களைச் சிறையில் வைத்த அசுரர்களைக் கொண்டு போய், கூரிய சூலம் நெஞ்சில் ஏறப் பாயவும், கழுகுகள் கொத்தி விளையாடவும், தலையை அரிந்தவனே, மேகங்கள் சூழ்ந்த வயல்களில் சங்குகள் உலாவிப் பரந்திருக்கும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 865 - கும்பகோணம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனா, தத்ததன, கொண்டு, வீசும், பெருமாளே, நறுமணம்