பாடல் 843 - திருப்பெருந்துறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்த தந்தன தானன தந்தத் தனத்த தந்தன தானன தந்தத் தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான |
இரத்த முஞ்சியு மூளையெ லும்புட் டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட் டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி இதத்து டன்புகல் சூதுமி குந்திட் டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட் டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ...... டிடமாயா பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித் துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப் பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப் பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக் குலத்தெ னும்படி கூனிய டங்கிப் பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ...... சடமாமோ தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக் திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் ...... டியல்தாளம் தனத்த குந்தகு தானன தந்தக் கொதித்து வந்திடு சூருடல் சிந்தச் சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் ...... டிடும்வேலா சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட் டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச் சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் ...... சரணோனே செகத்தி னின்குரு வாகிய தந்தைக் களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத் திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே. |
* நான்கு சைவக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அரசனுக்காக குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவனே குரு மூர்த்தியாக இருந்து அடியார்களுக்கு ஞான உபதேசம் செய்வதைக் கண்டுத் தாமும் இழுக்கப்பட்டு அவ்வடியர்களுடன் உபதேசம் பெற்றார். அதனால் ஞானப்ரசங்கத் திருப்பெருந்துறை எனப்பட்டது.
** இது அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து 8 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 843 - திருப்பெருந்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனத்த, தந்தத், தந்தன, உபதேசம், டூடுடி, குந்தகு, கந்தப், உடல், இருந்து, டுண்டுடு, மேலும், பெருமாளே, தீதக், தரித்த, வந்திடு, குந்திட், னந்தன, திமித்தி, திந்தத், மிந்திமி, தடுட்டு