பாடல் 842 - கோடி - குழகர் கோயில் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான |
நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன நேயமதி லேதினமு ...... முழலாமல் நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை நீரிலுழல் மீனதென ...... முயலாமற் காலனது நாவரவ வாயிலிடு தேரையென காயமரு வாவிவிழ ...... அணுகாமுன் காதலுட னோதமுடி யார்களுட னாடியொரு கால்முருக வேளெனவு ...... மருள்தாராய் சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி தோகைகுற மாதினுட ...... னுறவாடிச் சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ சோதிகதிர் வேலுருவு ...... மயில்வீரா கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு கூடிவிளை யாடுமுமை ...... தருசேயே கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர் கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே. |
* கோடி என்னும் குழகர்கோவில் வேதாரணியத்துக்குத் தெற்கே 5 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 842 - கோடி - குழகர் கோயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, என்னும், வீற்றிருக்கும், மயில், விரும்பி, அலைச்சல், பெருமாளே, உடைய, மேலுள்ள, என்னை