பாடல் 841 - வேதாரணியம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானன தத்த தனந்த தானன தத்த தனந்த தானன தத்த தனந்த ...... தனதான |
நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம் நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும் நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள் நூல்வல்ம லர்ப்பொ ருதுண்டம் ...... அவையாலும் சேலினை யொத்தி டுகண்க ளாலும ழைத்தி டுபெண்கள் தேனிதழ் பற்று மொரின்ப ...... வலைமூழ்கிச் சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி தேறுத வத்தை யிழந்து ...... திரிவேனோ வாலஇ ளப்பி றைதும்பை யாறுக டுக்கை கரந்தை வாசுகி யைப்பு னைநம்பர் ...... தருசேயே மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து வாளிப ரப்பி யிலங்கை ...... யரசானோன் மேல்முடி பத்து மரிந்து தோளிரு பத்து மரிந்து வீரமி குத்த முகுந்தன் ...... மருகோனே மேவுதி ருத்த ணிசெந்தில் நீள்பழ நிக்கு ளுகந்து வேதவ னத்தி லமர்ந்த ...... பெருமாளே. |
* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி ரயில் சந்திப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 841 - வேதாரணியம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, யொத்த, பெற்ற, தனந்த, தத்த, பெருமாளே, அரிந்தும், பத்து, வாசுகி, மரிந்து