பாடல் 84 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி;
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தந்த தனன தந்த தனன தந்த தனன ...... தனதான |
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற ...... வுடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய ...... விழஆவி வெங்கண் மறலி தன்கை மருவ வெம்பி யிடறு ...... மொருபாச விஞ்சை விளைவு மன்று னடிமை வென்றி யடிகள் ...... தொழவாராய் சிங்க முழுவை தங்கு மடவி சென்று மறமி ...... னுடன்வாழ்வாய் சிந்தை மகிழ அன்பர் புகழு செந்தி லுறையு ...... முருகோனே எங்கு மிலகு திங்கள் கமல மென்று புகலு ...... முகமாதர் இன்பம் விளைய அன்பி னணையு மென்று மிளைய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 84 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, பெருமாளே, உடைய, விளங்கும், இன்பம், மென்று, தங்கள், வந்து, சென்று