பாடல் 836 - திருக்குடவாயில் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனா தத்தன தனனா தத்தன தனனா தத்தன ...... தனதான |
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு ...... விலைமாதர் அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக ளவரே வற்செய்து ...... தமியேனும் மயலா கித்திரி வதுதா னற்றிட மலமா யைக்குண ...... மதுமாற மறையால் மிக்கருள் பெறவே யற்புத மதுமா லைப்பத ...... மருள்வாயே கயிலா யப்பதி யுடையா ருக்கொரு பொருளே கட்டளை ...... யிடுவோனே கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே குயிலா லித்திடு பொழிலே சுற்றிய குடவா யிற்பதி ...... யுறைவோனே குறமா தைப்புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் ...... பெருமாளே. |
* திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 836 - திருக்குடவாயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, தத்தன, ஒழிந்து, வேல், பெருமாளே