பாடல் 837 - திருக்குடவாயில் - திருப்புகழ்

ராகம் - துர்கா
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான |
சுருதி யாயிய லாயியல் நீடிய தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள் தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல் துறவு மாயற மாய்நெறி யாய்மிகு விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள் சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும் பருதி யாய்மதி யாய்நிறை தாரகை பலவு மாய்வெளி யாயொளி யாயெழு பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும் பரம மாயையி னேர்மையை யாவரு மறியொ ணாததை நீகுரு வாயிது பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான் கருது மாறிரு தோள்மயில் வேலிவை கருதொ ணாவகை யோரர சாய்வரு கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக் களப பூண்முலை யூறிய பாலுணு மதலை யாய்மிகு பாடலின் மீறிய கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக் குருதி யாறெழ வீதியெ லாமலர் நிறைவ தாய்விட நீறிட வேசெய்து கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான் குடிபு கீரென மாமது ராபுரி யியலை யாரண வூரென நேர்செய்து குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே. |
* அருணகிரி நாதர் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை நினைத்து வியக்கின்றார்.
** முருகவேள் தமது பன்னிரு தோள், மயில், வேல் இவைகளை மறைத்து ஞான சம்பந்தராக வந்தார் என்பது பொருள்.
*** திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 837 - திருக்குடவாயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, மிக்க, தகதிமி, யாய்மிகு, பன்னிரு, மயில், வேல், வந்த, மறைத்து, எவரும், பொருளாய், ஞானிகள், விரிவு, யாயெழு, பெருமாளே, பலவுமாய், பெரிய