பாடல் 834 - எட்டிகுடி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தன தத்தன தானா தானா தத்தன தத்தன தானா தானா தத்தன தத்தன தானா தானா ...... தனதான |
மைக்குழ லொத்தவை நீலோ மாலோ அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ வத்திர மெய்ச்சசி தானோ நாணா குத்துமு லைக்கிள நீரோ மேரோ வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ...... வெனமாதர் தக்கவு றுப்பினுள் மாலே மேலாய் லச்சைய றப்புணர் வாதே காதே சைச்சையெ னத்திரி நாயே னோயா ...... தலையாதே தற்பொறி வைத்தருள் பாராய் தாராய் தற்சமை யத்தக லாவே னாதா தத்தும யிற்பரி மீதே நீதான் ...... வருவாயே முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோளார் மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் ...... மருகோனே முத்தமிழ் வித்வவி நோதா கீதா மற்றவ ரொப்பில ரூபா தீபா முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ...... முருகோனே இக்குநி ரைத்தவி ராலூர் சேலூர் செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர் மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் ...... வயலூரா எச்சுரு திக்குளு நீயே தாயே சுத்தவி றற்றிறல் வீரா தீரா எட்டிகு டிப்பதி வேலா மேலோர் ...... பெருமாளே. |
* நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 834 - எட்டிகுடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானா, ஒப்பானவை, உள்ள, வாய்ந்த, இல்லாமல், பிறர், மயில், மேல், சேல், வேல், பெருமாளே, பாலோ, வேலோ, தானோ, நூலோ, வேளூர், நீதான், நீயே