பாடல் 829 - நாகப்பட்டினம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தந்ததன தந்ததன தந்ததன தான தந்ததன தந்ததன தந்ததன தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான |
மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ டார மும்படித ரம்பொறியு டன்பணிகள் மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர் பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர் தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும் வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன் வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்தமூல ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே. |
வலிய மார்பு இடத்தில் தாமரை மொக்கு எனவும் மலை எனவும் சொல்லத் தக்க மார்பகத்தோடு, முத்து மாலையும் படிந்த, மேன்மையான தேமலுடன், அணி கலன்களும் மாலையாய் அணிந்த ஒளி வீசும் பவளமும் நறு மணச் சந்தனக் குழம்புடன் பூ மாலை அசைய, வாள் போல அசையும் கண் பொருந்திய (காதில் உள்ள) குண்டலங்களைத் தள்ளும் கூந்தல் பாரத்தில் பூமாலையை அணிந்துள்ள பெண்களின் முகங்கள் சந்திரனையும் வெற்றி கொண்டன என விளங்க, வாயிதழும் தாமரை இதழ் போல விளங்க, கழுத்து சங்கு போல் விளங்க, காதலை எழுப்பும் மஞ்சள் பூசப்பட்ட தோளும், கிளியின் நாசியைப் போன்ற நகங்களும், பட்டாடை அணிந்து துவட்சி அடைந்துள்ள இடையுடன் இன்பத்தைத் தரும் பாண்டம் என்று சொல்லும்படியான பெண்குறியும், தழைத்துள்ள வாழை என்னும்படியான தொடைகளும் உடைய ரம்பை என்னும் தெய்வப் பெண் போன்ற விலைமாதர்கள். காலில் உள்ள சதங்கை, கொலுசு சிறந்த சிலம்பு இவைகளைப் பூண்டு நடனத்தைச் செய்யும் அழகிய மாதர்கள் மீது கலவி தாகம் கொண்டு நான் திரிந்தாலும், போற்றப்படும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன். வீர வெண்டையம் என்னும் காலணி ஒலிக்க, இசையை எழுப்பும் சங்கும் முரசும் அழகிய பறையும் பேரொலி செய்ய, பிரமனும் தேவர்களும் வேதம் ஓத வல்லவருடன் கலந்து ஓசையை எழுப்ப, வெந்து அழிவதற்காக நெருங்கி வந்த சூரனின் கர்வம் ஒடுங்க, மேகமும் மிக ஒலிக்க, விஷத்தைக் கொண்ட ஆயிரம் யானைகளின் பலத்தை உடைய பாம்பாகிய ஆதி சேஷனுடைய மலை போன்ற பணாமுடிகள் வேக, அசுரர்களின் பல தலைகளை அறுத்தெறிந்து (குடைக்) கூத்து ஆடிய வேலனே, நரசிங்க வடிவத்தைக் கொண்டு கடுமை கொண்ட இரணியனை நடுங்க வைத்து நடனம் புரிந்து, இலங்கையில் வலிமை வாய்ந்த ராவணனின் கூட்டம் அடங்கி ஒழிய (கோதண்டம் என்னும்) வில்லை ஏந்திய கைகளை உடைய திருமால் பெற்ற ஞானம் படைத்த மங்கை, அமுத உருவினள், என்னுடைய தாய் ஆகிய குறப் பெண் வள்ளி நாயகியை மணந்த திருப்புயத்தை உடையவனே, நாகப்பட்டினம் என்னும் அழகிய தலத்தில் அமர்ந்து விளங்குபவனே, சிவபெருமான் போற்றும் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 829 - நாகப்பட்டினம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்ததன, என்னும், உடைய, அழகிய, விளங்க, மார்பு, கொண்டு, ஒலிக்க, கொண்ட, பெண், மாலை, உள்ள, தாமரை, எழுப்பும், தம்பிரானே, எனவும்