பாடல் 828 - நாகப்பட்டினம் - திருப்புகழ்

ராகம் - §.¡ன்புரி
தாளம் - ஆதி - தி.ரநடை - 12
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த ...... தனதான |
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென் றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும் ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற் கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன் கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 828 - நாகப்பட்டினம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, பிரபுக்கள், என்றும், மற்று, தந்த, போல், என்னும், ஆகிய, பெருமாளே, வாகை, வட்ட, ரைப்ர, யிற்று, ரந்த, வெற்றி