பாடல் 827 - சிக்கல் - திருப்புகழ்

ராகம் - பந்துவராளி
தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தத்தத் தந்தான தானன தனதன தத்தத் தந்தான தானன தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா |
புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை பொருபுய திக்கெட் டும்போயு லாவிய ...... புகழாளா பொருவரு நட்புப் பண்பான வாய்மையி லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய ...... கவிபாடி விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள் எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும் வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு ...... மிடிதீர மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு ...... மருள்வாயே இலகிய வெட்சிச் செந்தாம மார்புய சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல் இமயம கட்குச் சந்தான மாகிய ...... முருகோனே இளையகொ டிச்சிக் கும்பாக சாதன னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் ...... மருகோனே அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி ...... யிசையாலே அழகிய சிக்கற் சிங்கார வேலவ சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும் அசுரரை வெட்டிச் சங்கார மாடிய ...... பெருமாளே. |
* சிக்கல் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.சிக்கல் முருகனின் பெயர் சிங்கார வேலவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 827 - சிக்கல் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, சிங்கார, தனதன, தானன, தந்தான, தத்தத், அணிந்த, சிக்கல், விளங்கும், வந்த, வெட்டிச், மாகிய, அழகிய, பெருமாளே, திசைகளிலும்