பாடல் 823 - பெரியமடம் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனதனன தானதன தத்தனா தாத்த தனதனன தானதன தத்தனா தாத்த தனதனன தானதன தத்தனா தாத்த ...... தனதான |
கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய் களவுமத னூல்பலப டித்தவா வேட்கை கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து ...... கழுநீரார் கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய் கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை ...... கருதாதே தலமடைசு சாளரமு கப்பிலே காத்து நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை ...... தடுமாறித் தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை தனையுமரு நாளையும வத்திலே போக்கு தலையறிவி லேனைநெறி நிற்கநீ தீ¨க்ஷ ...... தரவேணும் அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி ...... அவதான அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி ...... அசுரேசர் பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி கரதலக பாலிகுரு வித்தனே போற்றி பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி ......பெருவாழ்வாம் பிரமனறி யாவிரத தக்ஷிணா மூர்த்தி பரசமய கோளிரித வத்தினால் வாய்த்த பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் ...... பெருமாளே. |
* தீ¨க்ஷ என்பது குருவின் அறிவுரை. அது ஏழு வகைப்படும்: நயன (கண்களால்), ஸ்பரிச (தொடுவதால்), மானச (மன அலைகளால்), வாசக (சொல்லால்), சாஸ்திர (வேத நூல்களால்), யோக (யோகாப்பியாசத்தால்), ஔத்திரி (கேள்வி - பதில் மூலமாக) என்பனவாகும்.
** பெரிய மடம் கும்பகோணத்தில் மகாமகக் குளத்துக்கு வட கரையில் உள்ள சைவ மடம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 823 - பெரியமடம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, உள்ள, தனதனன, தாத்த, தானதன, தத்தனா, என்னை, தழுவி, அறிவுரை, வந்த, மடம், பெரிய, பெருமாளே, என்னும், அப்பனே, வாய்த்த, காத்து, புத்தியால், தீ¨க்ஷ, யத்தனே, தக்ஷிணா, அருணகிரி, மூர்த்தி