பாடல் 822 - திருவர்ருர் - திருப்புகழ்

ராகம் - குந்தல வராளி
தாளம் - ஆதி - 2 களை - 16
தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன ...... தனதான |
பாலோ தேனோ பலவுறு சுளையது தானோ வானோர் அமுதுகொல் கழைரச பாகோ வூனோ டுருகிய மகனுண ...... வருண்ஞானப் பாலோ வேறோ மொழியென அடுகொடு வேலோ கோலோ விழியென முகமது பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ...... மகிழ்வேனை நாலாம் ரூபா கமலஷண் முகவொளி யேதோ மாதோம் எனதகம் வளரொளி நானோ நீயோ படிகமொ டொளிரிட ...... மதுசோதி நாடோ வீடோ நடுமொழி யெனநடு தூணேர் தோளா சுரமுக கனசபை நாதா தாதா எனவுரு கிடஅருள் ...... புரிவாயே மாலாய் வானோர் மலர்மழை பொழியவ தாரா சூரா எனமுநி வர்கள்புகழ் மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா வாதா டூரோ டவுணரொ டலைகடல் கோகோ கோகோ எனமலை வெடிபட வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓதார் சீராள் கதிர்மதி குலவிய தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா தூயா ராயார் இதுசுக சிவபத வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே. |
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 822 - திருவர்ருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானா, என்றும், அருளிய, தேவர்கள், கொண்ட, கோகோ, அல்லது, பாலோ, என்னும், திருவாரூர், தேவியார், மீண்டும், விளங்கும், வேறு, உள்ள, சிவசிவ, பாகோ, வேலோ, வானோர், தானோ, தேனோ, ரூபா, நானோ, அரகர, மாயா, வீடோ, நீயோ, பெருமாளே