பாடல் 819 - திருவாருர் - திருப்புகழ்

ராகம் - . ரஞ்சனி
தாளம் - தி.ர ஏகம்
தானானத் தனதான தானானத் ...... தனதான |
நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய் வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே. |
நீ ஒருவன்தான் எல்லா வகையாலும் ஊழிக்காலம் வரைக்கும் எப்போதும் அருள் நிறைந்தவனாகி சிறந்த தானப் பொருளாக மேலான ஞான பீடமாகிய உன் திருவடிகளைத் தந்தருள்வாய். பிரம்மனுக்கு மைத்துனனாகிய முருக வேளே, வீரனே, நற்குணங்கள் யாவும் நிரம்பப் பெற்றவனே, ஆறு* ஆதாரங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பவனே, திருவாரூரில்** இருக்கும் பெருமாளே.
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
** திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 819 - திருவாருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், உரிய, பெயர்களும், இருக்கும், தனதான, பெருமாளே, தானானத்