பாடல் 818 - திருவர்ருர் - திருப்புகழ்

ராகம் -
நீலாம்பரி
தாளம் - ஆதி 2 களை
தாளம் - ஆதி 2 களை
தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான |
பாலோ தேனோ பாகோ வானோர் பாரா வாரத் ...... தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ பானோ வான்முத் ...... தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே தாய்மார் நேசத் ...... துனுசாரந் தாரா தேபே ¡£யா தேபே சாதே யேசத் ...... தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாண்மா லானா தேனற் ...... புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே சேலோ டேசே ராரால் சாலார் சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. |
நீ பால் தானோ, தேன்தானோ, வெல்லக்கட்டிதானோ? தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ? நீ இவ்வுலகிலுள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ? பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த முத்தோ நீ? என்றெல்லாம் விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும், தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும், புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும், ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ? வள்ளி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில், ஆசை குன்றாத நிலையில் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று, அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும், அவளுக்கு ஆளாக, வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே, சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள சீர்பெற்ற திருவாரூர்* தலத்தின் பெருஞ் செல்வமே, இறைவன் சேயே, கந்த வேளே, மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே, இறைவனே, தேவர்களின் பெருமாளே.
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 818 - திருவர்ருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, தாய்மார், பெருமாளே, அன்புடன், வேளே, தேபே, வாழ்வோ, தாலோ, சேயே