பாடல் 810 - வழுவூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனனா தத்தன தாத்த தந்தன தனனா தத்தன தாத்த தந்தன தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான |
தலைநா ளிற்பத மேத்தி யன்புற வுபதே சப்பொரு ளூட்டி மந்திர தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன் சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க ளறியா முத்தமி ழூட்டி முண்டக தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும் கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி கமழ்வா சற்படி நாட்ட முங்கொள ...... விதிதாவிக் கமலா லைப்பதி சேர்த்து முன்பதி வெளியா கப்புக ஏற்றி யன்பொடு கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் ...... மறவேனே சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு ...... கதிர்வேலா சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர் வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக ...... அழகோனே மலைமே வித்தினை காக்கு மொண்கிளி யமுதா கத்தன வாட்டி யிந்துள மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் ...... மணவாளா வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி நடமா டிச்சுரர் போற்று தண்பொழில் வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் ...... பெருமாளே. |
வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து, சிவ மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை உனது திருவருளால் உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி, முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும்மண்டலங்களையும் உள்ள மேலிடத்தில், இடைகலை பிங்கலை* என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ள பர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து, முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம் கொள்ள, சுவாதிஷ்டான** ஆதாரத்தைக் கடந்து, மூலாதாரத் தலமான திருவாரூர் முதலில் சேர, அது முதலாக உள்ள தலங்கள் பிறவற்றைப் புலப்பட யோக ஒளியை ஏற்றி வைத்து, அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில் வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன். கிரெளஞ்ச மலை வீழவும், கடல் போன்ற காலாட் படைக்கூட்டம் கெட்டு அழியவும், அசுரர்களின் தலைகளை அழித்து, ஆகாயத்தின் உச்சியில் தலைகளின் மாலையை ஏற்றி வைக்கவும் செலுத்திய ஒளிமயமான வேலனே, சிவகாம சுந்தரியின் ஒப்பற்ற காதலரும், என் தந்தையும், வரிகளை உடைய பாம்பு மாலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு, மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற சிவ ஞானப் பொருளை உபதேசித்த, தாமரை மலர் போன்ற முகமுடைய அழகனே, வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்தைக் காத்து வந்த அழகுக் கிளி, அமுதைப் போல உடலும் மார்பகங்களும் கொண்டவள், கடப்ப மலர் மாலையை கூந்தலில் விளங்க சூட்டிக் கொண்டவள் ஆகிய வள்ளி என்னும் தெய்வ மகளின் கணவனே, நீண்ட கோழிக் கொடி மேலே விளங்கும்படி நடனமாடியவனே, தேவர்கள் போற்றும் குளிர்ந்த சோலைகளை உடைய வழுவூர்*** என்னும் நல்ல ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.
இப்பாடல் அருணகிரிநாதர் திருவடி தீ¨க்ஷ, உபதேசம் முதலிய பேறுகளைப் பெற்ற வரலாற்றைக் குறிக்கும்.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
*** வழுவூர் மயிலாடுதுறைக்குத் தெற்கே இலந்தங்குடி ரயில் நிலையத்துக்கு மேற்கே கால் மைலில் உள்ள தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 810 - வழுவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், உள்ள, வைத்து, கரம், இடைகலை, தாத்த, என்னும், பிங்கலை, பத்து, மலர், உடைய, தனனா, முனை, முதலிய, முண்டக, தந்தன, தத்தன, ஏற்றி, மேல், ஸஹஸ்ராரம், சக்கரம், உடலில், பெயர், காற்றுக்கு, விடும், என்றும், ஒன்று, நாடிகளுள், யும், பெயர்களும், சுவாசம், உரிய, சுழு, தலங்கள், பெருமாளே, அன்புடன், பொருளை, வழுவூர், வாட்டி, கூட்டி, காட்டி, சேர்த்து, அக்கினி, ஏற்படும், ஒப்பற்ற, ஆகிய, வள்ளி, மாலையை, வந்து, நல்ல, நாடி, கொண்டவள்