பாடல் 803 - திலதைப்பதி - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த ...... தனதான |
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற் பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை படுபுட் பவன முன்றி ...... லியலாரும் அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல் அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப அலையிற் றிரிவ னென்று ...... மறிவேனோ தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த ...... தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று தனிமத் தளமு ழங்க ...... வருவோனே செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித் திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே. |
* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.
** திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 803 - திலதைப்பதி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனனத், நின்று, அழகிய, கொண்ட, படம், நான், நல்ல, பெருமாளே, ஒப்பான, திமித, தனதானா, தழுவி, தகிடத், தகிட, திமிதத், திலதைப்