பாடல் 802 - திலதைப்பதி - திருப்புகழ்

ராகம் - ஜனரஞ்சனி
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனனத் தனனா ...... தனதான |
இறையத் தனையோ ...... அதுதானும் இலையிட் டுணலேய் ...... தருகாலம் அறையிற் பெரிதா ...... மலமாயை அலையப் படுமா ...... றினியாமோ மறையத் தனைமா ...... சிறைசாலை வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர் சிறையைத் தவிரா ...... விடும்வேலா திலதைப் பதிவாழ் ...... பெருமாளே. |
* திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து.தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 802 - திலதைப்பதி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நெறி, அந்த, எவ்வளவு, பெருமாளே