பாடல் 801 - கந்தன்குடி - திருப்புகழ்

ராகம் - ஸஹானா
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன ...... தனதான |
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும் வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும் வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம் சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும் கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே. |
* கந்தன்குடி காரைக்காலில் இருந்து பேரளம் செல்லும் ரயில் பாதையில் அம்பகரத்தூர் அருகே ஒரு மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 801 - கந்தன்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தந்தன, எப்போதும், நின்றும், உள்ள, எனது, கந்தன்குடி, பெருமாளே