பாடல் 797 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்த தானன தனதன தனதன தனத்த தானன தனதன தனதன தனத்த தானன தனதன தனதன ...... தனதான |
பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக நகைத்து வாமென அமளிய ருகுவிரல் பிடித்து போயவர் தொடையொடு தொடைபட ...... வுறவாடிப் பிதற்றி யேயள விடுபண மதுதம திடத்தி லேவரு மளவுந லுரைகொடு பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் ...... கனமாலாய் முருக்கி னேரித ழமுதுப ருகுமென வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் ...... பொருள்தீரின் முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ ...... அருள்தாராய் நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி ...... கொளும்வேலா நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி புரத்தி லேநகை புரிபர னடியவர் நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய ...... புதல்வோனே செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை மருக்கு லாவிய மலரணை மிசைபுணர் திருக்கை வேல்வடி வழகிய குருபர ...... முருகோனே சிறக்கு மாதவ முனிவரர் மகபதி யிருக்கு வேதனு மிமையவர் பரவிய திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே. |
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 797 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனத்த, தானன, மொழிகளைப், வந்து, அன்பு, காட்டி, கொண்ட, அசுரர்களின், பேசி, போல், தொடை, பிதற்றி, பிடித்து, திருக்கை, பெருமாளே, அருகில், மீது