பாடல் 798 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் - காபி
தாளம் - சதுஸ்ர ரூபகம் - திஸ்ர நடை - 9
- எடுப்பு - அதீதம் வீச்சில் 1 தள்ளி
தாளம் - சதுஸ்ர ரூபகம் - திஸ்ர நடை - 9
- எடுப்பு - அதீதம் வீச்சில் 1 தள்ளி
தனத்த தானன தனதன ...... தனதான |
மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும் தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே. |
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 798 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - லாவிய, காரணமாக, பெருமாளே, மாலையை, வளர்த்த, மரகத